Monday, August 27, 2012

அட்ட கத்தி


முதல் நாளே பார்த்த முதல் லோ பட்ஜெட் படம்.... சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்ததால் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 10 பேர் சென்றோம்....

படம் சூப்பர்... இன்றைய தமிழ் சூழலுக்கு தேவையான படத்தை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

சிலாகிக்க பல காட்சிகள் உள்ளன

ஹீரோ,4 நண்பர்களோடு பாரில் தண்ணியடிக்கும் சீனோ, தம்மடிக்கும் சீனோ இல்லை....  ரூட் விடும் பெண் 'அண்ணா' என்றழைத்ததும் கூல் டிரிங்க் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான்....

காலேஜ்ல ரூட்டு தல ஆனதும் தம்மடித்தோ, பீரடித்தோ கொண்டாடவில்லை... மாறாக போதை பொருள் யூஸ் பண்ணுபவர்களை அடிக்கிறான்....

மிக எளிமையாக காதலிக்கிறான்... காதலின் வலியை புரிய வைக்க அவனும் நொந்து நம்மையும் நோகடிக்கவில்லை....

காதல் கவுந்தாலும் தற்கொலை, தாடிவளர்ப்பு, ஒயின்ஷாப் என்று அலையாமல் வாழ்க்கையை ஓட்டி விடுகிறான்....

இன்றைய சூழலுக்கு தேவையான மிக சிறப்பான படம்.... தண்ணி, தம் இல்லாமல் இள வயசு பசங்களை வைத்து ஒரு சுவாரசியாமான படம் தர முடியும் என்று அழுத்தந்திருத்தமாக நிருபித்த இயக்குனருக்கு எப்படி புகழ்ந்தாலும் தகும்....