சிறந்த டைரக்டரின் கைவண்ணத்தில் IPL சினிமாவின் திரைக்கதை அட்டகாசமாக செல்கிறது.... ஜெயிக்கும் அணிகள் தோற்பதும்.... தோற்கும் அணிகள் ஜெயிப்பதுமான சீன்கள் சிறப்பாக செதுக்க படுகின்றன... சென்னை அணியின் மேட்சுகள் கடைசியாக வருகின்றன.... செமி பைனலுக்கு கொண்டு செல்லபடவேண்டுமே.... இதிலும் தமிழ் போராளிகளின் அச்சுறுத்தலுக்கிணங்கி இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.... ஆனால் இந்தியாவில் விளையாடலாமாம்.... தமிழன் தன்னை தானே ஒதுக்கி கொள்கிறான்.... பாகிஸ்தான் இந்தியாவில் விளையாட கூடாது... ஒரு மாநிலத்தில் மட்டும் அல்ல.... தமிழன் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எனில் தமிழ் நாட்டை விட்டு எங்கேயும் செல்லாமல் தமிழ் நாட்டிலேயே பொழப்ப பாக்கணும்.... மத்த ஊர்ல போய் சம்பாதிக்கலாமாம்.... ஆனால் தமிழ் நாட்டுக்கென தனி சட்டங்கள் வேணுமாம்.... உலக அளவில அதிகளவில் வெளியூர்களில் பிழைக்கும் இனம் தமிழ் இனமும், மலையாள இனமுமாகத்தான் இருக்கும்.....
என்னமோ போங்க போனதடவை பெங்கால் முதல்வர் கொல்கத்தாவின் வெற்றியை அரசு வெற்றி ஆக்கி அரசியல் ஆக்கினார்... தமிழ் நாடும் இம்முறை பங்கேற்கிறது....