Wednesday, June 20, 2012

கலாம்

பதவி வெறி பிடித்த முன்னாள் சாதனையாளர்.... எல்லோரும் ஆதரித்தால் போட்டியிடலாம்ங்கிற மாதிரி வார்த்தைய வுட்டுட்டு அப்புறம் காங்கிரஸ் வேட்பாளர அறிவிச்சதும் ச்சீ இந்த பழம் புளிக்கும்ங்ற ரேஞ்சிக்கு போட்டியிட போவதில்லை என்று அறிக்கை வேற.... கலைஞருக்கு, அன்னாவுக்கு அப்புறம் ஒரு பெஸ்ட் காமெடியனாக ஆகி விட்டார்... கலாமுக்குதான் பாரத ரத்னா மற்றும் ஒருமுறை ஜனாதிபதி பதவியும் கொடுத்தாகிவிட்டதே.... இன்னும் என்ன கனவு வேண்டிகிடக்குது... பேசாம அமெரிக்க ஜனாதிபதியாக கனவு காண வேண்டியதுதானே.... இல்லாட்டி சன் டிவில தினமும் ஒரு அறிவியல் தகவல் சொல்லாம்... சில பெருசுகள நெனச்சாலே எரிச்சல் வர்ற மாதிரி ஆகுது... கலைஞர், அன்னா இந்த வரிசைல வாலண்டியரா வந்து ஏறியிருக்கும் கலாம் கூடத்தான்... ஆனா கலைஞர் எல்லாம் ஜனாதிபதி ஆகல.. ஆகியிருந்தா ராஷ்ட்ரபதி பவர்... கலைஞர் அறிவாலயமா மாத்தி டிரஸ்டுக்கு கொண்டாந்திருப்பாரு...

Monday, June 4, 2012

செஸ்

விஸ்வநாதன் ஆனந்த்.... உலக சாம்பியன்... வெற்றி என்பதை தலைக்கு ஏற்றாத சாதனை தமிழர்களில் ஒருவர்... நாமெல்லாம் ஒரு சின்ன விஷயத்துக்கே ஆடும் போது சாதிச்சிட்டு சைலண்டா இருக்கிற இவர பாத்தா என்னமோ பண்ணுது.... உலகத்திற்கு இந்தியாவின் அடையாளமாய் ஆகியிருக்கு ஆனந்த்... வாழ்த்துக்கள்.... கிரிக்கெட்டை கட்டி அழும் நாம் இவரோட மதிப்ப எப்போ உணர போறோம்...