Monday, July 16, 2012

மண்டே

மண்டே


எனது E7 பைபேக் செய்துவிட்டு S3 வாங்க வேண்டும் என்று மனைவியிடம் சொன்னேன். வாங்கி 15 மாசந்தானே ஆகுது அதுக்குள்ளயா? என்றாள்....

குழந்தையே 10 மாசந்தான் வயித்துக்குள்ள இருக்கு... மொபைல்ல 15 மாசம் வச்சிருக்க முடியுமா என்றேன்



மாமனாரிடம் இரவு ஷிரடி செல்கிறோம் என்றேன். செகண்ட் ஷோவா?? யார் நடிச்சது? என்றார்


மச்சானுக்கு வயசு 28... பொண்ணு பாக்க தொடங்கயிருக்கிறோம்.... 35 வயசுல பொண்ணு பாருங்க என்கிறான்... அவன் ஒரு சமீரா ரெட்டி ரசிகன்....


தடையற தாக்க படம் பார்த்தேன்  - ஒரு க்ளீன் ஆக்ஷன் மூவி வித் பர்பெக்ட் லவ் எபிசோட்.... விஜய் நடித்திருந்தால் பல உயரம் சென்றிருக்கும்....

பில்லா 2 விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதால் போகவில்லை... சகுனி பார்த்தேன்... டிவியில் பார்க்க நன்றாகத்தானிருந்தது....

Sunday, July 8, 2012

நான் ஈ படம்னா இது படம்... மத்ததெல்லாம் பப்படம்.... ராஜமெளலி தான் ஒரு கிங் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டார்... ஒரு அருமையான திரைக்கதையின் ஆரம்பமாக இது ஒரு பெட் டைம் ஸ்டோரி என்றுதான் ஆரம்பிக்கிறார்.. ஆனால் ஒரு பத்து நிமிடங்களிலேயே திரைக்கதை நம்மை ஆக்கிரமித்து விடுகிறது... மூணே மூனு லைன் வசனத்தில் வில்லனின் கேரக்டரைஷேஷன் புரிந்து விடுகிறது... சூப்பர் ஸ்டாரின் 'சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' வசனம் மிகச்சரியாக ப்ளேஸ் செய்யப்பட்டுள்ளது.... விமர்சனம் படிக்காமல் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய விஷூவல் ட்ரீட் தான் இந்த ஈ...