தமிழக அரசு மற்றும் மத அமைப்புகளின் புண்ணியத்தால் என்னதான் ப்ரசினை என்று பார்க்க வந்த வட இந்திய க்யூரியாசிடி பார்டிகளால் சனி இரவு ஹவுல் காட்சியாக விரிந்த படம் விஸ்வரூப்
முதலில் கதா நாயகன் ஒரு கதக் டான்ஸராக அறிமுகம்... மனைவியிடம் கூட கணவனாக நடக்காத கேரக்டர்... குறட்டை விட்டு தூங்குவதாக நடிக்கிறார்..... அதனாலோ என்னமோ மனைவி இன்னொருவருடம் செக்ஸ் மட்டும் இல்லாத தொடர்பு வைத்திருக்கிறார்... அவர் அப்படி இருப்பதால் இவரும் அப்படி இருந்தால் மன உளைச்சல் இல்லை என்பதால் இவரை வேவு பார்க்க ஒரு ஆளை நியமிக்கிறார்... அவர் இவரை பற்றி பார்ப்பவர் உட்பட யாருமே திடுக்கிடாத உண்மையை கண்டுபிடிக்கிறார்... அதாவது இவர் வேறு மதத்தவர் என்று.... ஆனால் கண்டுபிடித்த சில நிமிடங்களில் சிலரால் கொல்லப்படுகிறார்.... அந்த சிலர் நாயகனையும் அவரது மனைவி மற்றும் காதலனை பிடித்து வந்து சில வசனம் மற்றும் போன் காலுக்கு பிறகு மனைவியின் காதலனை கொன்று விடுகின்றனர்... நாயகனை சுடுவதற்கு முன் நாயகர் இறைவனை வேண்டிக் கொள்ள அனுமதிக்கிறார்கள்.... அப்போது நாயகன் எடுக்கிறார் விஸ்வரூபம்.... பாட்ஷா பட காட்சிக்கு 50% அளவிற்கு வந்திருக்கிறது இந்த காட்சி.... குடுத்த 150 ரூபாயில் 125 ரூபாய் இந்த காட்சிக்கு கழித்து கொள்ளலாம்... மீதி 25 ரூபாய் நாயகிக்கு கொடுத்து விடலாம்....
இதற்கு மேல் படம் விமர்சிக்கவோ, பார்க்கவோ, எழுதவோ தகுதி இல்லாமல் இப்படம் இருப்பதால் இத்துடன் விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment