Monday, March 26, 2012

கூடங்குளம்

சமீப காலங்களில் கூட்டம் கூட்டமாக மஞ்சக்கொடிய தூக்கிகிட்டு கூடுற வழக்கம் அதிகமாயிருச்சி... உலக அளவில் லிபியா, அமெரிக்கா, தேசிய அளவில் அன்னா சீ, தமிழகத்தில் முல்லை பெரியார், கூடங்குளம்....

கூடங்குளம் கூட்டம் சற்று வித்தியாசமானது... மின்சாரமே இல்லாத மாநிலத்தில் மின்சார உற்பத்தி வேண்டாம் என்று சமானிய மக்கள் கூடுவது விசித்திரமாக இருந்தாலும்.... ஜெ, கருணா, தோழர்கள் என எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இன்றி இத்தனை மக்கள் இத்தனை நாட்கள் போராடுவது ஆச்சரியம்... தின'மலம்' போன்ற பத்திரிக்கைகள் மேற்கொண்ட காழ்புணர்ச்சி தாக்குதல், மத்திய அரசின் அடாவடிகளையும் சமாளித்தது பெரிய விஷயம்...

மாண்புமிகு புரட்சி தலைவியின் அறிவிப்பையும் மீறி போராடும் இவர்களை சமாளிக்க அரசு வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது... ஒரு வருட டாஸ்மாக் வருமானத்திலேயே அணு உலையை மூடினாலும் ஏற்படும் நஷ்டத்தை சரி பண்ணிவிடலாம் என்பதையும் மீறி அம்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.... அதுவும் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே..... மக்கள் என்ன பாவம் பண்ணினார்கள்....

ஜனநாயக சர்வாதிகாரம் என்பது இதுதான்... சுதந்திர நாடு என்பது வெறும் பேச்சளவில்தானா?.. இல்லை சுதந்திரத்தின் விளக்கம் புரியாமல் நாம்தான் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?....

காங்கிரஸ தப்பு சொல்லியும் பிரயோஜனமில்லை... ஏன்னா வரிந்து கட்டி முன்னேற வேண்டிய பிஜேபி பிட்டு படம் பார்க்கிறதிலேயே நேரத்த செலவழிக்குது... மூணாவது அணி அமைஞ்சா அதவிட கெட்ட நேரம் எதும் கிடையாது... அதனால காங்கிரஸ விட்டா வேற கதியும் இல்ல...

ஆனா.. ஜெ போன்ற கேடு கெட்டவர்கள் அரசியல விட்டு துரத்தப்பட வேண்டும்... ஒன்னு ஒயுங்கா முன்னாடியே கூடங்குளம் கூட்டத்த கலச்சிட்டு மின் உற்பத்திய தொடங்கிருக்கனும்... இல்லாட்டி சட்டசபைல நிறைவேத்துன தீர்மானத்தயாவது மதிக்கனும்... ரெண்டும் இல்லாம இடைத்தேர்தல் முடிஞ்சதும் அறிவிப்ப வெளியிடறது என்னா ஒரு வில்லத்தனம்....

கூடங்குளம் மற்றும் தமிழர்களுக்காக இல்லாத கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழி தெரியாத...

ஒரு தமிழன்

Tuesday, March 20, 2012

தமிழன்

தமிழன நடுரோட்ல நிக்க வச்சி சாணில முக்கி செருப்பால அடிச்சாலும் திருந்தவே மாட்டானுவ என்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரிகிறது...

நாயடி, பேயடி, காயடி பட்டாலும் புத்தி தெளிய மாட்டேங்குதே.... ஜெயிக்க வச்சாலும் ஒரு நாமினல் வித்தியாசத்தில ஜெயிக்க வச்சா பரவால்ல... இவ்ளோ வித்தியாசத்தில ஜெயிக்க வச்சா.. அந்தம்மா சும்மாவே ஆடும்... சலங்கய கட்டி உறுமி மேளத்தயும் அடிச்சா..... தாங்குறானுவளே தமிழனுங்க... என்னா ஒரு சகிப்பு தன்மை....

ஜனநாயகத்தில் வென்றவரை வாழ்த்த வேண்டும். எனவே முத்து லட்சுமிக்கு வாழ்த்துக்கள்....

இருந்தாலும் தமிழனுவள நினைச்சா வாந்திதான் வருது....

தமிழர்கள்

தமிழர்கள் நிஜமாகவே கொடுத்து வைத்தவர்கள்....

வெள்ளிக்கிழமைகளில் புது படம்... புதுபடம் இல்லாட்டினாலும் பழைய படம் ரிலீஸ் ஆகுது... அதையும் பாத்துட்டு சந்தோஷமாக பதிவெழுதும் பதிவர்கள்...

16 மணி நேர ஓய்வு.. எட்டு மணி நேர வேலை...( கரண்ட் கட்டால் )... அரசு மதுக்கடைகள்... ஒவ்வொரு ஊரிலும் வெஜ், நான் வெஜ் என கலந்து கட்டி அடிக்கும் உணவகங்கள்.... அதிகாலை நாலு மணிக்கே உளுந்து வடை கிடைக்கு டீக்கடைகள்.... இரவு 3.59 வரை புரோட்டா கிடைக்கும் இரவு உணவகங்கள்...

வடிவேலு, விவேக், சந்தானம் என திரை காமெடியன்கள், வைகோ, ராம்தாஸ், திருமா, சீமான் என அரசியல் காமெடியன்கள், படையப்பா.. நீலாம்பரி டப் ஃபைட்டுக்கு இணையான கருணா ஜெ சண்டை... எத்தனை என்டெர்டெயின்மென்ட்....

இலவச கல்வி,இலவச அரிசி, இலவச லேப்டாப், இலவச ஆடுமாடு, இலவச வீடுகள், இலவச உணவு, இலவச சைக்கிள், இலவச செருப்பு - ஏழை என்பதற்கு அர்த்தமே தெரியாத மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்...

எனக்கு தெரிந்து 70 தமிழ் சேனல்கள் இருக்கின்றன. உள்ளூர் சேனல்கள் எத்தனை என்று தெரியவில்லை... சீனா, இந்தி, ஆங்கிலம் போன்ற அதிகம் பேர் பயன்படுத்தும் மொழிகளில் கூட இத்தனை சேனல்கள் இருக்குமா என்று தெரியவில்லை... கொடுத்து வைத்த தமிழர்கள்....

ஒவ்வொரு நாளும் எப்படியாவது ஒரு தலைப்பு செய்தி கிடைத்து விடுகிறது... ஒரு பரபரப்பு செய்தியும் கிடைத்து விடுகிறது....

பிறந்த குழந்தை முதல்... சாக கிடக்கும் பெருசு வரை ஏதோ ஒரு என்டெர்டெயின்மெண்ட் கிடைத்து விடுகிறது...

தமிழ்ர்கள் நிஜமாகவே அதிர்ஷ்டசாலிகள்தான்

Sunday, March 11, 2012

நானும் பிரபல பதிவரும்

நானும் பிரபல பதிவரும்

நேற்று ஒரு போன் வந்தது.... நான் நன்றாக எழுதுவதாகவும் ஜாக்கியை கலாய்ப்பதாகவும் பேசினார்கள்...
எனக்கு ஒன்றும் புரியவில்லை.. இருந்தாலும் பேசி விட்டு வைத்தேன்...

இன்று காலை கூகுளாண்டவரிடம் செக் செய்த போதுதான் தெரிந்தது பிரபல பதிவர் என்ற பெயரில் ஜாக்கியின் ஸ்பூஃப் சைட் ஒன்று இருக்கிறது.... நான் அவன் இல்லை.... என்று தெரிவித்துக் கொள்கிறேன்...

பதிவு எழுதவே நேரம் இல்லை... இதுல இன்னொருத்தர் எழுதுறத கலாய்த்து எழுத வேண்டுமா???