சமீபத்தில் ட்விட்டரில் நடந்து வரும் சர்ச்சைகளை காணும் போது தமிழர்கள் குழாயடி சண்டை மனநிலையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது....
கல் தோன்றி மண் தோன்றி முன் தோன்றா மூத்த குடி என்று பீற்றி கொள்ளும் சமூகத்தில்தான் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது... நான் குறை சொல்வது இருதரப்பையுமேதான்.... ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியேறியிருக்கலாம்.... மற்றொரு டீம் இத்தனை மோசமான வார்த்தை தாக்குதல் நடத்தி இருக்க தேவையில்லை....
மேலும் ஒரு டெக்னாலஜியை மோசமாக பயன்படுத்துவதில் தமிழனுக்கு நிகர் தமிழந்தான்... ஜாலியாக இருக்க வேண்டிய இடத்தில் சீரியஸாகவும்... சீரியஸாக இருக்க வேண்டிய இடத்தில் காமெடி பண்ணுவதிலும் அவனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனலாம்.
எல்லா க்ரூப்பிலும் ஜாதி எளிதாக நுழைந்து விடுகிறது... ஜாதி வெறியை தணிக்க பெரியார் நடத்திய போராட்டம் இம்மி அளவிலும் பயன் தரவில்லை... ஜாதிகள் இல்லை நாமெல்லாம் மனிதர்கள் என்ற மனநிலை எந்த காலத்திலும் வரப் போவதில்லை...