செம மொக்க படம்... கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், இசை என்று எல்லா கோர் ஏரியாவிலும் சொதப்போ சொதப்புன்னு சொதப்பிய படம்....
கண்டிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். வழிப்பறிக் கொள்ளையர்களாக நேரடியாக பீகார் மாநிலத்தினரை சுட்டிக்காட்டுவது... வெகுஜன படம் சென்ஸாராகும் போது சென்ஸார் அதிகாரிகள் என்னத்த புடுங்கிகொண்டிருந்தனரோ தெரியவில்லை...
சூர்யாவுக்கு அறிவே கிடையாதா? இப்பதான் ஏழாம் அறிவு என்று ஒரு ஜெனடிக்ஸ் சம்பந்தமான படம் வந்தது. தொடர்ந்து அதே ஜென்ரேயில் படம் செய்யும் முட்டாளா சூர்யா... மொத்ததில் ரூபாய் 500 செலவு செய்த என்னை மாதிரி குடும்பஸ்தனுங்க வயித்தெரிச்சல வாங்கி கட்டிகிட்டாரே... நாலு அட்வடைஸ்மெண்ட் நடிச்சு ரசிகர்களின் பணத்த திருப்பி கொடுத்து எங்க வயித்துல பால வார்த்தார்னா நல்லாருக்கும்....
kv ஆனந்த் - மூன்று வெற்றி படங்களுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வருஷம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த படம் கொடுத்திருக்கலாம்.... தமிழ் நாட்டில் எஸ்.எஸ்.ராஜமவுலி போல ஒரு மாஸ் டைரக்டர் உருவாகவே மாட்டார் போல இருக்கு.... பாக்குறவனல்லாம் பைத்தியக்காரன்னு நினைச்சாதான் இப்படி ஒரு திரைக்கதை எழுத முடியும்..
காஜல் - பொண்ணு அழகா இருந்தாலும் கேரக்டர் ஸ்கெட்ச் மோசமா போனதுதான் பாவம்... ஆனாலும் லவ் டிராக் இவ்ளோ சொதப்பலா இருந்திருக்க தேவையில்லை....
பாடல் - ரெண்டு பாட்டு ஓகே..
இசை - ஹாரிஸ் ஜெயராஜ உக்ரெயின் மெண்டல் ஹாஸ்பிடல்ல சேத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்.. அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான பிண்ணனி இசை.
No comments:
Post a Comment