Sunday, November 25, 2012

துப்பாக்கி



லேட்டாக பார்த்த காரணம் இங்கே இந்த வெள்ளிதான் ரிலீஸ்

படம் சூப்பர்.... எல்லோரும் அர்ஜூன், விஜயகாந்த் பாணி படம் என்றார்கள்.. ஆனால் அவர்களுக்கு இது செட் ஆகாது... விஜய்க்கு மட்டுமே ஆன ஸ்டைலிஷ், க்யூட் திரைக்கதை... பாடல் காட்சிகளில் குஷி விஜயை வைத்து க்ராபிக்ஸ் பண்ணியிருக்கிறார்களோ என சந்தேகம் எழும் அளவிற்டகு க்யூட் ஆக இருக்கிறார்.

 காஜல் ஐ மிஸ் யூ....

நான் மிகவும் ரசித்த காட்சிகள்....

1) ஹாஸ்பிடலை விட்டு தப்பும் தீவிரவாதியை துரத்தும் அசத்தல் ஸ்டைல்
2) தப்பிக்க விட்டவனை கொலை செய்யும் லாவகம்
3) புதுக்கோட்டை ராணுவவீரரின் கதை - ஒரு நொடி சிலிர்ப்புடன் கூடிய ஒரு சொட்டு கண்ணீர் வந்து விட்டது
4) 12 பேர் அட்டாக்
5) அந்த அமர்க்களமான இண்டெர்வல் ப்ளாக்
6) தங்கச்சியை கடத்தியவர்களை துவம்சம் செய்யும் ருத்ர தாண்டவம்
7) க்ளைமாக்ஸில் வில்லனை தூண்டி விடும் சீன்

விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படம். மற்றவர்கள் கொண்டாடும் படமாக அமைந்ததுதான் சூப்பர்....

ஏ.ஆர்.முருகதாஸ் 7ம் அறிவில் விட்டதை துப்பாக்கியில் பிடித்து விட்டார்... ஒரே ஒரு ரிக்வெஸ்ட் இனிமேலும் ஹாரிஸிடம் கூட்டணி வைக்காதீர்கள்.... ஹாரிஸூக்கு உடனடி தேவை ஐந்து வருட கட்டாய ஓய்வு

Sunday, November 18, 2012

பாலா சாஹேப் தாக்கரே



லெஜண்டரி மேன்... மும்பையில் சனிக்கிழமை நாலு மணிவாக்கில் தாக்கரே மறைந்து விட்டார் என்று அதிகாரபூர்வ செய்தி வெளியாகிறது... ஐந்து மணிவாக்கில் மும்பையே அமைதியாகிவிட்டது... மூச்சு விடும் சப்தம் கூட கேட்காத நிசப்தம் மும்பையில்... ஞாயிறும் அதே நிலைமைதான்... வீட்டு காம்பெளண்டுகளில் விளையாடும் குழந்தைகளின் சத்தம் கூட கேட்கவில்லை... அமைதி.. அமைதி... அப்படியொரு அமைதி.... எந்த சூழ்நிலையிலும் இயல்பை மாற்றாத மும்பை நிஜமாகவே ஸ்தம்பித்து விட்டது....

இறுதி ஊர்வலம் திட்டமிட்ட படி திட்டமிட்ட பாதையில் அமைதியாக முடிந்ததது. இறுதி சடங்குகளும்தான். சுமார் 20 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில் வன்முறை வெடிக்காமல் அமைதி காத்ததே அந்த மாபெரும் மனிதரின் வெற்றி...

மும்பை போன்ற மாநகரில் இவ்வளவு மக்களை கவர்ந்திருக்கிறார் என்றால் நிஜமாக அவர் ஒரு மாபெரும் மனிதர்தான்....


ஆத்மா சாந்தியடைக‌

Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்



அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

Thursday, November 8, 2012

தமிழன்



தமிழரில் ஒரு பிரிவினர் மறுபடி மறுபடி முட்டாள்கள், கத்து குட்டிகள் என்று ஃப்ருவ் செய்து கொண்டிருக்கிறார்கள்.... நக்கலாக கடந்து செல்லும் விளம்பரத்திற்கெல்லாம் ஆர்பாட்டம் கண்டனம் என்று கதறி கொண்டிருக்கிறார்கள்.... மற்ற மாநிலங்களில் இருக்கும் சர் நேம் கான்செப்டுக்கு, தமிழ் நாட்டில் ஜாதி சாயம் பூசி மெழுகி அழுது கொண்டிருக்கிறார்கள்... சாதிக்கும் சர் நேமுக்கும் வித்தியாசம் தெரியாத பதர்களுக்கு, டில்லியை பொறுத்தவரை சவுத் என்றாலே மதராஸி, மதராஸி என்றாலே அய்யர் என்பது இன்னும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...


வடக்கில் பெயர் கான்செப்டிலேயே சர் நேம் மிகவும் அவசியம்... மும்பையில் இருக்கும் தமிழர்களின் குழந்தைகளின் பெயர்களில் நாடாரும், அய்யரும், பிள்ளையும் கலந்திருக்கும்... அவர்களை பொருத்த வரை அது சர் நேம்தான்... ஜாதி அல்ல... அந்த பக்குவம் தமிழர்களுக்கு எப்போது வரும்???

Monday, November 5, 2012

இரங்கல்



எனக்கு சிக்கன் மசாலா மற்றும் மட்டன் பிரியாணி செய்ய டிவி மூலம் கற்று கொடுத்த திரு ஜேக்கப் அவர்கள் மறைந்து விட்டார். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Thursday, November 1, 2012

தாண்டவம்



வயசான விக்ரம்.... வயசு பொண்ணு அனுஷ்கா, எமி... டிரையான சந்தானம்... மற்றும் பலர் ஆடும் தெருக்கூத்துதான் இந்த தாண்டவம்....

என்னதான் லண்டன், கிராமம் அது இதுன்னு ஜல்லியடிச்சாலும் வலுவான கதை இல்லாததால் ரொம்ப பரிதாபமாக இருந்தது பாக்குறதுக்கு.... அதுவும் விக்ரம் இந்தியாவின் டாப் 5 ஆபிசர்ர்ர்ர்ர்ர்னு சல்யூட் அடிக்கும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்... அனுஷ்கா வரும் போர்ஷன் மட்டும்தான் படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யமான போர்ஷன்... தம்பி ராமையா 'தப்பாச்சே' என புன்னகைக்க வைக்கிறார்