Monday, February 4, 2013

ஏன் கமல்?



விஸ்வரூபம் படம் பார்த்த பிறகு சில கேள்விகள்....

1) அப்பா மகன் உறவை கொச்சை படுத்தி வெளியான நடுநிசி நாய்கள் படத்தை கிழி கிழி என கிழித்தவர்கள் ஒரு சமுதாயத்தை இவ்வளவு கொச்சை படுத்தியிருக்கும் படத்தை கிழிக்காமல் இருப்பது ஏன்?

2) இங்கே பிவண்டி எனும் புறநகர் பகுதியில் (முஸ்லீம் சமூகம் மெஜாரிட்டியாக வாழும் ஏரியா) விசிலடித்து கைதட்டி படத்தை கொண்டாடி பார்க்கும் ரசிகர்கள் மிகவும் இறுக்கமாக இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஏன்?

3) உண்மையில் நடப்பதைத்தான் காட்சிபடுத்தியிருக்கிறோம் என்றால் அது ஒரு டாகுமெண்டரியாக எந்த சார்பும் இல்லாமல் இருக்க வேண்டுமே தவிர கற்பனையான‌ வெகுஜன சினிமாவில் இவ்வளவு டீடெயிலிங் ஏன்?

4) உங்கள் படத்தை தடை செய்யாமல் உங்களுளையே இனிமேல் படமே எடுக்க கூடாது என்று தடை விதித்தால் என்ன?

5) தங்கள் சக போட்டியாளரான ரஜினி இதுவரை ஏதாவது ஜாதி பெயரிலோ மதத்தின் பெயரிலோ நடிக்காமல் கமர்சியல் சினிமாவை கமர்சியலாகவே முன்னெடுத்து சென்று ஜெயித்து கொண்டிருக்கிறாரே ஏன்?

6) ஒரு மனநலம் இல்லாத சிறுவனை மனித வெடிகுண்டாக மாற்றும் காட்சிகள் எல்லாம் இந்திய சினிமாவிற்கு தேவையா... இது சிலரின் மனதை புண்படுத்தும் என்பது தெரியாதது ஏன்?

7) வெளியிடவே தகுதி இல்லாத ஒரு சினிமாவிற்கு 'UA' சான்றிதழ் பெற்றது எப்படி?

8) குருதிபுனல், ஹேராம், உன்னை போல் ஒருவன், விஸ்வரூம் என தொடர்ந்து ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் படங்களை எடுக்க உங்களை தூண்டுவது யார்?

9) மன்மதன் அம்புவில் ஒருபாடலுக்கு எதிர்ப்பு சொன்னதால் அந்த பாடலையே படத்தில் இல்லாமல் பார்த்து கொண்டவர் இந்த படம் அதிர்வலைகளை உண்டாக்கும் என கணிக்காமல் விட்டது எப்படி?

10) வீட்டை வைத்து படம் எடுத்திருக்கிறேன் என்று சிம்பதி க்ரியேட் பண்ணுகிறவர், நாடு முக்கியம் என்ற வாதமும் செய்பவர், 50 வருட அனுபவம் மிக்கவர் இந்த சினிமா எந்த அளவிற்கு ஒரு சமூகத்தை புண்படுத்தும் என்று புரியாமலா இருக்கிறீர்கள்?

11) ஏதோ ஒரு அமைப்பில் இருக்கிறீர்களாமே? அவர்கள் கருத்து என்ன?

உங்களால் ஒரு நன்மை.....  பூனைக்கு மணியை கட்டி விட்டார்கள்... இனியாவது படம் எடுப்பவர்கள் சற்று சிந்திப்பார்கள்



6 comments:

  1. // தங்கள் சக போட்டியாளரான ரஜினி இதுவரை ஏதாவது ஜாதி பெயரிலோ மதத்தின் பெயரிலோ நடிக்காமல் கமர்சியல் சினிமாவை கமர்சியலாகவே முன்னெடுத்து சென்று ஜெயித்து கொண்டிருக்கிறாரே ஏன்?
    //

    thalaivare.. semma comedy.. ரஜினி இம்மாதிரியான படமெல்லாம் எடுத்துட்டா.. உலகம் அன்னையோட முடிஞ்சிரும்.

    ReplyDelete
    Replies
    1. எடுக்க மாட்டார் தல... அதனால்தான் அவர் கமல் அளவுக்கு திறமை இல்லா விட்டாலும் சூப்பர் ஸடாரகவே இருக்கிறார்....

      வீட்ட வித்துடுவேன் என்றெல்லாம் கதறியதில்லை....

      Delete
  2. Sema comedy pathivu.. Ungaluku humor Nalla varudhu Adha try pannunga Thala...

    ReplyDelete
  3. ஹையோ.... ஹையோ.... உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு.

    ReplyDelete