Saturday, December 31, 2011

2011 - ஒரு பார்வை

2011 - ஒரு பார்வை

முதலில் என்னை கவர்ந்த திரைப்படங்கள்

1) சிறுத்தை. பயணம், வானம், மைதானம், ஆண்மை தவறேல், ஆரண்ய காண்டம், தெய்வதிருமகள், காஞ்சனா, மங்காத்தா, வேலாயுதம்...

2011 அதிர்ச்சிகள் - ஜெயா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி, தனுஷ்க்கு தேசிய விருது, கொலவெறி பாடலின் கொலவெறி ஹிட்...

2011 காமெடிகள் - விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர், அன்னா கோஷ்டிக்கு ரஜினியின் ஆதரவு...

2011 வாழாவெட்டிகள் -வைகோ, கே.எஸ்.ரவிக்குமார், அன்னா ஹசாரே...

2011 காணாமல் போனோர் - அழகிரி, ராமதாஸ், தமிழ்க காங், சீமான், ராணா,

2011 டுபாக்கூர் படம் - ரா ஒன்

Friday, December 30, 2011

2012

வெல்கம் 2012.....

பெரிய மக்கள் புரட்சிகளோடு முடிந்தது 2011....

உலக அளவில்... லிபியா, அமெரிக்க வால் ஸ்ட்ரீட் மக்கள் புரட்சி...
இந்திய அளவில்.... ஊழலுக்கு எதிரான மக்கள் எழுச்சி...
தமிழக அளவில்... கூடங்குளம், முல்லை பெரியார் மக்கள் எழுச்சி....

ஒவ்வொரு ஆட்சியையும் ஓட்டில் மட்டும் எடை போட்ட மக்கள் சரியோ, தவறோ ஒன்று கூட ஆரம்பித்து விட்டார்கள்....

இது ஆள்வோருக்கான எச்சரிக்கை மணி..... அதே சமயம் மக்கள் கூட்டத்தை தவறாக பயன்படுத்தினால் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதற்க்கான சரியான உதாரணம் அன்னாவின் எழுச்சியும்... வீழ்ச்சியும்....

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.....

வேலை நாள்

வருடத்தின் இறுதி வேலை நாள்...

என்னல்லாம் பண்றதுன்னு லிஸ்ட் எடுத்து முடிக்கிறதுக்குள்ள பாதி நாள் ஓடி போச்சி...

இன்னும் பாதி நாள்ல என்ன பண்ண முடியும்னு யோசிச்சி லீவு எடுத்துட்டேன்,,,,

வர்ட்டா....

Wednesday, December 28, 2011

ரஜினி

யார் பெத்த புள்ளையோ... வேற மாநிலத்திலேர்ந்து இங்க வந்து அடி வாங்குறதுக்குன்னே ரெடியா இருக்கு....

முல்லை பெரியாறு... கூடங்குளம் போன்ற விஷயங்களில் மெளனமாக இருந்துந்துட்டு... இப்ப தீடீர்னு இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா எபக்டில அன்னா கோஷ்டிக்கு ஆதரவு தர்றாரு.... காமெடி என்னான்னா அன்னா கோஷ்டியே இப்ப கூட்டம் சேரலன்னு அமைதியாயுட்டாங்க...

திடீர் தமிழ் உணர்வாளர்கள் சும்மா விடுவானுவளா??? தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்பானுவ....

அப்புறம் ஒரு உளறலான அறிக்கை வரும்.... அதுவும் ஒண்ணும் புரியாது....

ஆனா அந்த அறிக்கைக்கு திருக்குறள் ரேஞ்சுக்கு விளக்கவுரை ரஜினி ரசிகர்களின் வெப்சைட்ல வரும்...

என்னவோ போங்க... ரஜினி என்ற மாயை விலகுகிறதா??

Tuesday, December 27, 2011

லோக்பால்

அன்னாவின் காமெடி அளவுக்கு மீறி போய் கொண்டிருக்கிறது,,,,

சுயேச்சையான அமைப்பு என்றால் அது யார் கையில் இருக்கும்.. அதற்கு தேவையான இன்கம் எங்கேர்ந்து வரும்...
செலவுகளை யார் தணிக்கை செய்வார்கள்.... எப்படியும் அரசாங்கம்தானே...

மேலும் அமைப்பு உறுப்பினர்கள் என்ன வான மண்டலத்திருந்தா வருவார்கள்... அவர்களும் மனிதர்கள் தானே....

ஒரு சின்ன உதாரணம்... இப்ப ஒரு டிரைவிங் லைசன்ஸ் எடுக்க 1500 ரூபாய் ஆகுது என்றால்... லோக்பால் உறுப்பினருக்கும் சேர்த்து ரூபாய் 2000 அழ வேண்டியிருக்கும்.... லஞ்சம் அதிகம் ஆகுமே தவிர குறைய வாய்ப்பில்லை....

எளிய வழி... சிபிஐக்கு அதிக அதிகாரம்.... கோர்ட்டுகளி வழக்குகள் விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கை...

இப்ப இருக்குற மீடியா பவர்ல பெரிய ஊழல் கொஞ்சம் கஷ்டம்தான்... ஒன்னுமே இல்லாத 2G ய ஊதி ஊதியே பெருசாக்கலையா....

Monday, December 26, 2011

முல்லை பெரியார்

என்னவோ போங்க... தமிழனுக்கு எல்லாப்பக்கமும் அடிதான்... இத்தன அடிவாங்கியும் வலிக்காத மாதிரி நடிக்கிறானே அதுக்கே அவார்ட் கொடுக்கனும்...

இப்ப என்னான்னா கூட்டம் கூட்டமா மஞ்சகொடிய தூக்கிட்டு வேற கிளம்பிர்றானுக... கூடங்குளம் கூட்டம் ஒருபக்கம்... தேனி மாவட்ட கூட்டம் ஒரு பக்கம்....

மொதல்ல நம்ம ஏரி, குளங்கள ரியல் எஸ்டேட் பேர்வழிகள்டேர்ந்து மீட்டு ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணாலே இந்த உணர்ச்சிவசப்பட்டு கூட்டம் சேர வேண்டிய அவசியம் இருக்காது... மழை நீர ஒழுங்கா சேமிச்சாலே மத்த மாநிலத்த எதிர்பார்க்காம நம்ம தேவையை பூர்த்தி செய்துக்கலாம்...

அத வுட்டுட்டு எப்ப பாத்தாலும் எல்லாரோடயும் சண்டய போட்டுட்டு இருந்தா என்னத்த சொல்ல....

ஒஸ்தி

டபாங் கின் அட்டு ரீ மேக்....

ஒக்கடுவை கில்லியாக்கிய தரணியா என்று அதிர வைத்த படம்....

வி.தா.வ... வானம் என கலக்கிய str திருந்திட்டார்னு நினைச்சி போனா... செருப்ப சாணில முக்கி மூஞ்சில அடிச்சி அனுப்பிட்டாரு...

படமா இது,,, பாடம்.... தியேட்டருக்கு வருவீங்களா... வருவீங்களான்னு...

முல்லை பெரியார்

முல்லை பெரியார்....

தமிழனின் இன்னொரு முட்டாள்த்தனமான சிந்தனை....

கூடங்குளம் பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச நம்ப மாட்டானுவளாம்....

ஆனா அணை பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச கேரளாக்காரனுவ நம்பனுமாம்...

தனக்குன்னா ரத்தம்... மத்தனுக்கு என்னா தக்காளி சாஸா...

பிரபல பதிவர்

எல்லோரும் பிரபல பதிவர் ஆகனும்னு நாயா பேயா அலையும் போது.... நான் மட்டும் பிரபல பதிவர் ஆகக் கூடாதா????