ஜெ மாறவில்லை...
ஜெ மாறவில்லை... மாற மாட்டார் என்று கூவுபவர்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும்.. ஜெ நல்லவர் ஆகிவிட்டார் என்று அவருக்கு ஓட்டு விழ வில்லை... அனைத்தும் கலைஞருக்கு எதிரான ஓட்டு... ஜெவை தவிர யாரும் தமிழ் நாட்டில் இல்லை என்ற நிலைமை....
இது தமிழ் நாட்டின் சாபம் என்றே சொல்ல வேண்டும்.... கடந்த 20 ஆண்டுகளில் கேரளா 4 முதல்வர்களையும், ஆந்திரா 7 முதல்வர்களையும், கர்நாடகா 9 முதல்வர்களையும் கண்ட காலகட்டத்தில் தமிழ் நாடு, ஜெ, கலைஞர், ஓபிஎஸ் என்ற மூன்று முதல்வர்களை மட்டுமே கண்டுள்ளது.. இதில் ஒபிஎஸ் கணக்கில் சேர்க்க முடியாது... ஜெ மற்றும் கலைஞர் தான்...
ஜெ மட்டும் அகம்பாவமின்றி கொஞ்சமே கொஞ்சம் நல்லாட்சி செய்திருந்தால் கலைஞர் தலை எடுத்திருக்க முடியாது... கலைஞருக்கு இருமுறை வாய்ப்பு வழங்கியது ஜெ தான்.... அதில் எந்த சந்தேகமும் இல்லை...
நேற்று சட்ட மன்றத்தில் ஜெவின் முக பாவனைகளை பார்த்த போது மிகவும் பயமாகி விட்டது... இன்னும் நாலு வருஷம் என்ன பாடு படுத்த காத்திருக்கிறார்களோ என்று
No comments:
Post a Comment