தலைவர்கள்
ஜெ, கருணா வை விட மோசமான தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார் கேப்டன்.... தமிழகத்திற்கு வேறு ஆப்ஷனே இல்லாமல் போய் விட்டதா... தலைமை பஞ்சம் உருவாகியுள்ளது... தமிழ் நாடு இன்னும் பத்து வருடங்களில் பீகார், ஒரிஸ்ஸா நிலைமைக்கு போகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன ....
முதலில் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களை பார்ப்போம்...
ஜெ - சொல்லத்தேவையில்லை
கருணா - சொல்லத்தேவையில்லை
விஜயகாந்த் - குடிகாரன் பேச்சுக்கு ஒரு உதாரணம்
ஸ்டாலின் - தலைமைக்கு தேவையான கட்ஸ் இல்லை
வைகோ - தொழிற்சங்க தலைமைக்கு சரியான நபர் மக்கள் தலைவராக முயற்சிப்பது ஆச்சரியம்
ராமதாஸ் - சாபதாஸாகவே இருந்தாலும் டாஸ்மாக் அவலங்களை பற்றி பேசும் ஒரே தலைவர்
திருமா, காங், எட்ஸட்ரா - சொல்லத்தேவையில்லை
கம்யூனிஸ்ட் - டீ சாப்பிடத்தான் லாயக்கு
மேலும் சிலர்
கேடி பிரதர்ஸ் - நினைத்தாலே பயமாக இருக்கிறது
கனிமொழி - ஜெ வெர்ஷன் டூ
அழகிரி - துக்ளக் தர்பார் வந்து விடும்
இந்த சார்டில் சிலர் விடுபட்டிருக்கலாம் ஆனால் இவர்கள்தான் அடுத்த பத்தாண்டிற்கான சாய்ஸ்.... என்ன செய்ய போகிறோம்.... சரியோ, தவறோ பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜியார் போன்ற தலைவர்கள் ஏன் உருவாகவில்லை... கடைசி தலைவர் எம்ஜியார் உருவாகி 40 ஆண்டு காலம் ஆகி விட்டது...
அடுத்த 10 ஆண்டுகளில் நாம் என்ன செய்யப்போகிறோம்...
No comments:
Post a Comment