எல்லா நிறுவனங்களிலும்... Learning from Incident... தவறுகளில் தெரிந்து கொண்டது எனபது மிக முக்கியமான பாடம்... ஒரே தவறு மறுமுறை நடக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்... அதனால்தான் இந்தியாவில் போபால் போன்ற விபரீதங்கள் 30 வருடங்களாக கண்ட்ரோலில் உள்ளன...
இது போன்ற கண்ட்ரோலில்தான் சட்டம் ஒழுங்கும் இருக்கிறது... ஆக்ஸிடன்ட், தனி நபர் குற்றங்கள் விதிவிலக்கு... உதாரணம்.. ரயில்/சாலை விபத்துக்கள்... கூடிவரும் மக்கள் தொகைக்கேற்ற நவீனம் அடையாததால் விபத்துக்கள் தொடர்கின்றன.... ஆனால் தொழிற்சாலை விபத்துக்கள் கண்ட்ரோலில் உள்ளன....
சமீபத்தில் பெருங்குடியில் வங்கி கொள்ளை, நேற்று கீழ் கட்டளையில் வங்கி கொள்ளை... நடந்தது சென்னைக்குட்பட்ட பகுதிகளில்... நிர்வாகம் என்ன செய்கிறது.... போன ஆட்சி சரியில்லை என்று அவர்களுக்கு தண்டனை அளித்தால் இந்த ஆட்சி மிக மோசமான நிர்வாகத்தை செய்து கொண்டிருக்கிறது....
எல்லா விதமான கொலை, கொள்ளை தினந்தோறும் நடக்கிறது... பேங்க் கொள்ளைகள் 30 வருடங்களுக்கு முன் கிராம வங்கிகளில் நடந்த விஷயம்... ஆனால் இப்போது சென்னையில் பரபரப்பான இடங்களில் சாதாரணமாகி விட்டது... learning from incident என்ன?
கிராமங்களில் வாழ வழியின்றி நகரங்களுக்கு குடி பெயரும் நிலை போய் சென்னை தவிர பிற நகரங்களில் பவர் கட்டால் வாழ முடியாமல் சென்னைக்கு குடி பெயரும் அபாயமான நிலை ஆரம்பித்து இருக்கிறது....
தமிழக மக்களை காப்பாற்ற வழியே இல்லையா???
No comments:
Post a Comment