Sunday, December 29, 2013

டாப் 10 சாங்ஸ் - 2013



1) ஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
2) யார் இவன் தெரிகிறதா - விஸ்வரூபம்
3) மின் வெட்டு நாளில் - எதிர் நீச்சல்
4) மிஸிஸிபி - பிரியாணி
5) வாங்கண்ணா வணக்கங்கண்ணா - தலைவா
6) அவுங்க கண்ணு நம்ம - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
7) மாமா டவுசர் - சூது கவ்வும்
8) காசு பணம் துட்டு - சூது கவ்வும்
9) என்வீட்டில - இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
10) கண்ணா லட்டு தின்ன ஆசையா 

டாப் 10 மூவீஸ் - 2013



1) சூது கவ்வும்
2) வருத்தப்படாத வாலிபர் சங்கம்
3) மூடர் கூடம்
4) பாண்டிய நாடு
5) விடியும் முன்
6) பிரியாணி
7) ஓநாயும் ஆட்டுகுட்டியும்
8) கண்ணா லட்டு தின்ன ஆசையா
9) எதிர் நீச்சல்
10) நேரம்

Thursday, October 31, 2013

ஆ........ரம்பம்

ஆ........ரம்பம்

காலங்காத்தால ஆறு மணிக்கு அண்ணன் போன் பண்ணி படம் சூப்பர்னு சொன்னத நம்பி போயி.... சாணில முக்குன செருப்படி வாங்கிட்டு வந்தேன்.....

ஒரு டைரக்டரிடம் மாஸ் படம் பண்ணிவிட்டு அதே டைரக்டருடன் அடுத்த படம் பண்ணினால் என்னாகும் என்பது எல்லா நடிகருக்கும் சமீப காலங்களில்விளங்கியிருக்கும்.... ரஜினிக்கு குசேலனில், விஜய்க்கு வில்லு மற்றும் ஆதியில், ஆர்யாவிற்கு அவன் இவன் மற்றும் சர்வம் படங்களில், சூர்யாவுக்கு 7ஆம் அறிவில் படங்களில் நடந்த ரசாயன மாற்றம் இந்த படத்தில் அஜித்திற்கு நடந்திருக்கிறது


படமா இது...  ஒரு சின்ன உதாரணம்..... ஊழல் பணத்த கடசில ரிசர்வ் வங்கிக்கு மாத்துறாங்க.... ரிசர்வ வங்கிங்கிறது இந்திய வ்ங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பே தவிர அது தனி வங்கி கிடையாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு திரைக்கதை.....

அஜித் பேசும் சில வசனங்கள் நன்றாக வந்திருக்கின்றன.....

விஜயகாந்த், ஷங்கர், அர்ஜுன், சரத் போன்றோர் 15 வருடங்களுக்கு முன் விட்ட சப்ஜெக்டை இப்போது அஜித் கையில் எடுத்திருப்பது அவருக்கு இருக்கும் மாஸ் கெத்துக்கு நல்லதல்ல.....

படத்தின் ஒரே ஆறுதல் டாப்ஸி அன்ட் அவரது கேரக்டரைஷேஷன்........


இந்த படத்தின் ஓப்பனிங் அள்ளினாலும் வரும் வாரங்களுக்கான சரக்கு சுத்தமாக இல்லை.....

வரும் வாரங்க்களுக்கான 'தல' எழுத்து ஆல் இன் அழகுராஜாவின் அவுட்புட்டில் இருக்கிறது

'சீஃப்' வலி.... ஆரம்பிக்காமலேயே இருந்திருக்கலாம்

Tuesday, October 15, 2013

GRAVITY



அற்புதமான படம்.... அவதாருக்கு பிறகு ஒரு விஷூவல் ட்ரீட்மென்ட்.... மொத்தமே மூன்று கதாபாத்திரங்கள்.... முதல் கதாபாத்திரம் 5 நிமிடங்களிலும் இரண்டவது 20 நிமிடங்களிலும் இறந்து விட சாண்ட்ரா புல்லக்கின் ராஜ்ஜியம் மீதி 70 நிமிடங்களுக்கு.... மார்வலஸ் ஸ்கிரீன் ப்ளே.... 3டி கண்டிப்பாக பார்த்து கொண்டாட வேண்டிய படம்.... டிக்கட் விலை குறைந்த பிறகு கண்டிப்பாக IMAX 3D யில் பார்க்க வேண்டும்.... அப்போதுதான் அந்த பிரமாண்டம் புரியும்....

இந்த வருடத்தின் ஆஸ்கார் ரிசர்வ்ட்...

Monday, September 9, 2013

தலைவா



வீட்டில் முதல் நாளே பார்த்து விட்டு ரெண்டாம் நாள் செல்ல இருந்த என்னை கைய பிடிச்சி இழுத்து உட்கார வைத்து விட்டார்கள், அதனால் மிஸ்ஸான படம்... நேற்றுதான் பார்த்தேன்

முதலில் இந்த படம் மொக்கை என்று சொல்பவர்கள் சுறா குருவி வகையறா படங்களை பார்க்காதவர்கள் போல் இருக்கிறது.... ஒரு டீசண்ட்டான எண்டெர்டெயினர் என்றால் என்ன என்று தெரியாத வகையறாக்கள்....ஆகையால் அவர்களை மன்னித்து விடலாம்

துப்பாக்கியை வைத்து இதை எடை போடுவது மடத்தனம்,.. அது வேறு இது வேறு... ஆனாலும் ஒரு மாஸ் மூவிக்கான எல்லா தகுதிகளும் இருக்கிறது... படம் ஒரு தடவை கண்டிப்பாக பார்க்கலாம்

இணைய விமர்சன மொக்கைகள் விமர்சித்த அளவிற்கு மோசமில்லை... அவர்கள் தங்க மீன்கள் பார்த்து ஆறுதல் அடையட்டும்

Monday, September 2, 2013

ஷீரடி விஜயம்



சனியன்று காலை புறப்பட்டு இரவே திரும்பிய ஷிரடி விஜயம் இனிதே முடிந்தது... ஒவ்வொரு முறையும் இனிய அனுபவமாகவே திகழ்கிறது ஷிரடி தரிசனம்

Thursday, August 8, 2013

சென்னை எக்ஸ்ப்ரஸ்



மொழி புரியுதோ இல்லையோ ஒரு மூணு மணி நேரம் சகலத்தையும் மறந்து சீட்டில் கட்டி போடும் படங்கள் மிக பெரிய வெற்றியை பெறுகின்றன.... அந்த வகையில் ஷாருக், ரோகித், தீபிகாவின் இந்த மேஜிக் மூவி கட்டி போடுகிறது.... ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு வெடி சிரிப்பு, 5 நிமிடத்திற்கு ஒரு புன்முறுவல் என்ற கான்செப்டில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.... ஷாருக் ட்ரயினில் ஏறும் போது ஆரம்பிக்கும் அதகளம் இடைவேளை வரை மெயிண்டெயின் செய்யப்பட்டுள்ளது.... செகண்ட் ஆஃப் கொஞ்சம் சுமார் என்றாலும் பெப் இருக்கிறது.... மொத்ததில் சென்னை எக்ஸ்பிரஸ் புல்லட் ட்ரெயின்....

ஹைலைட்ஸ் - லுங்கி டான்ஸ், கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர், சல் சல் (இந்த பாட்டில் எத்தனை வண்ணங்கள், கொள்ளை அழகு)

Monday, August 5, 2013

கடாரி



மகாராஷ்ட்ராவில் கடந்த மூன்று நாட்களாக கடாரி அமளி துமளி பட்டு கொண்டிருக்கிறது. இந்த அமாவாசையிலிருந்து கணேஷ் சதுர்த்தி முடியும் வரை ஷ்ரவண் எனும் விரத நாட்களினால் மராட்டியாகள் நான் வெஜ் மற்றும் மது அருந்த மாட்டார்கள்....

இந்த நாட்களுக்கு முந்தைய மூன்று நாட்களும் கடாரி எனும் கொண்டாட்ட நாட்கள்.... ஞாயிற்று கிழமை ஒயின் ஷாப் மற்றும் மட்டன் கடைகளில் க்யூ கட்டி நின்றது கூட்டம்...

சடங்கும் சம்பிரதாயங்களும் ஒருவித சேல்ஸ் யுக்திதானோ என தோன்றுகிறது

Wednesday, July 17, 2013

சிங்கம் 2



வசூலில் அதிரி புதிரியாக இருந்தாலும் யாருக்கும் பிடிக்கவில்லை என்பது உண்மை.... ரஜினியின் பாபா, குசேலனே ரெண்டாம் நாளில் காத்தாடிய போது இந்த படம் இவ்வளவு வசூலித்து கொண்டிருப்பது ஆச்சர்யமான உண்மை.... தமிழர்கள் வேறு வழியில்லாமல் பார்க்கின்றனரா என்பதுதான் கேள்வி.... ஹரியின் மற்ற படங்களில் இருந்த ஒரு திரைக்கதை இந்த படத்தில் இல்லை.... என்றாலும் மும்பையிலேயே மூன்றாம் வாரத்திற்கு தாக்கு பிடிக்கிறது படம்.... இதைத்தான் மாஜிக் என்பார்களோ....

Tuesday, July 9, 2013

சிங்கம் 2



இன்றைக்குதான் சிங்கத்தின் இரைச்சலில் இருந்து காது விடுபட்டிருக்கிறது.... மூன்று நாட்களாக ஒரே சத்தம்.... சிங்கம் 2 பார்த்ததால் வந்த எஃபெக்ட்....

ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது கல் அறுவை மெஷின்களுக்கு அருகே போகும் போது சவுண்ட்டை கம்மி பண்ண காதில் ஹெட்போன் டைப் டிவைசை மாட்டி செல்வோம்... சிங்கம் 2 பார்ப்பவர்கள் அதை அணிந்து சென்றால் காது தப்பிக்கும்... இல்லாவிடில் மினிமம் ஒருவாரத்திற்கு காதில் கொய்ங்க் என ஒரு சவுண்ட் கேட்டு கொண்டிருக்கும்

அஞ்சலிக்காக ஒரு தடவையும், அனுஷ்க்காவிற்காக ஒரு தடவையும் காதில் பஞ்சோடு பார்க்கலாம்

Sunday, June 23, 2013

உத்தரகாண்ட்


இயற்கை மறுபடியும் தனது ஆளுமையை காட்டியுள்ளது.... ஜப்பான் போன்ற நாடுகள் 24 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் போது நாம் ஒருவாரம் ஆகியும் இன்னும் மீட்க முடியாமல் திணறுகிறோம்.... டிஸாஸ்டர் மேனேஜ்மென்ட் என்பதன் முழு அர்த்தம் எப்போதுதான் புரிந்து கொள்ள போகிறோமோ தெரியவில்லை....

Thursday, June 20, 2013

எண்டமூரி வீரேந்திரநாத்

சமீபத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய சில நாவல்களை படித்தேன்... எல்லாமே முப்பது வருஷத்துக்கு முந்தைய நாவல்கள்... ஆனால் இன்னமும் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன‌

துளசிதளம் - தமிழர்களுக்கு தெரிந்த நாவல்.... அவரது டாப் டென்னில் டாப்பாக இருக்கும் நாவல் இதுதான் என்பது என் அபிப்ராயம்

மீண்டும் துளசி - துளசிதளத்தின் சீக்வல்... அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே இருந்தது....

காதல் செக் - செஸ் விளையாட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட சூப்பர் நாவல்.... பக்கங்கள் பறக்கும்

சாரதாவின் டைரி - ஒரு சாமானியன் இரு சாரதாக்களால் சந்திக்கும் பிரசினைகளை கொண்டு எழுதப்பட்டது.... ஒரு ஆந்திர மசாலா சினிமாவை பார்த்த எஃபெக்ட் கிடைக்கும்

காதலெனும் தீவினிலே - ஒரு வித்யாசமான கதை படித்த திருப்தி

காதலிக்கிறாள் சரிதா - படித்ததிலே மிகவும் சுமாரான கதை

Wednesday, June 5, 2013

விமர்சனங்கள்

சூது கவ்வும்

சென்னை சென்றபோது பார்த்த ஒரு சூப்பர் திரைப்படம்.....

திரைக்கதைக்கான ஒரு பாடம்.... முதல் 10 நிமிடங்களிலேயே எல்லா கேரக்டர்களும் அறிமுகமாகி விடுகின்றன....  ஒன்லைனர் பஞ்ச்கள் சூப்பர்... உதா "பேங்க் மேனேஜர்னா சாதாரணமா".... க்ளீன் எண்டெர்டெயின்மென்ட்...

நேரம்

சூப்பர் ஹிட் படமாக வேண்டியது... நல்ல மார்க்கெட்டிங் இருந்தும் எது தடுத்தது என்று புரியவில்லை.... எனக்கென்னமோ சூது கவ்வும் ஓடி ஒரு 6 வாரம் கழித்து வந்திருந்தால் கவனிக்கப்பட்டிருக்குமோ என தோன்றியது... தமிழ் வெர்ஷனில் ஜெய் நடித்திருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.... மலையாள ஹீரோ தமிழ் வெர்ஷனில் ஒட்டவேயில்லை....
ஆனாலும் ஒரு முறை பார்க்கலாம்...

Monday, May 27, 2013

ஷீரடி விஜயம்



சனிக்கிழமை திடீர் விசிட்டாக ஷீரடி சென்று வந்தோம்... காலையில் கிளம்பி மதியம் தரிசனம் முடித்து இரவே திரும்பிய விசிட்.... கூட்டம் அதிகம்... ஆனாலும் கூட்டத்தை கோவில் நிர்வாகமும் ஊர் மக்களும் சமாளிக்கும் விதம் தென்னக கோவில் நிர்வாகிகளும் ஊர் மக்களும் ஒருவாரம் தங்கியிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம்.... க்யூவில் நின்றால் 1 - 1 1/2 மணி நேரத்தில் தரிசனம் முடிக்கும் அளவு ஒரு அருமையான ஏற்பாடு செய்திருந்தார்கள்.... க்யூ நகரும் வழியில் முதலுதவி குழு, தண்ணீர் விநியோகம், ஏர் கூலர்ஸ், டாய்லட் வசதிகள் சுத்தமாகவும் சுகாரதாரமாகவும் அமைத்திருந்தனர்..... பாபாவின் தரிசன இடத்தில் தள்ளு முல்லுகள் இல்லை.... திவ்ய தரிசனம்.... முக்கியமான விஷயம் அர்ச்சனை பொருட்களை அதிக விலையில் தலையில் கட்டும் அராஜக கும்பல் இல்லை.... இஷ்டத்திற்கு விலை வைக்கும் ஹோட்டல்க‌ளும் இல்லை.... சுவையான தரமான மதிய உணவு 50 ரூபாயில் கிடைத்தது ஒரு தரமான ஹோட்டலில்....

Wednesday, April 17, 2013

IPL - திருவிழா



சிறந்த டைரக்டரின் கைவண்ணத்தில் IPL சினிமாவின் திரைக்கதை அட்டகாசமாக செல்கிறது.... ஜெயிக்கும் அணிகள் தோற்பதும்.... தோற்கும் அணிகள் ஜெயிப்பதுமான சீன்கள் சிறப்பாக செதுக்க படுகின்றன... சென்னை அணியின் மேட்சுகள் கடைசியாக வருகின்றன.... செமி பைனலுக்கு கொண்டு செல்லபடவேண்டுமே....  இதிலும் தமிழ் போராளிகளின் அச்சுறுத்தலுக்கிணங்கி இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.... ஆனால் இந்தியாவில் விளையாடலாமாம்.... தமிழன் தன்னை தானே ஒதுக்கி கொள்கிறான்.... பாகிஸ்தான் இந்தியாவில் விளையாட கூடாது... ஒரு மாநிலத்தில் மட்டும் அல்ல.... தமிழன் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எனில் தமிழ் நாட்டை விட்டு எங்கேயும் செல்லாமல் தமிழ் நாட்டிலேயே பொழப்ப பாக்கணும்.... மத்த ஊர்ல போய் சம்பாதிக்கலாமாம்.... ஆனால் தமிழ் நாட்டுக்கென தனி சட்டங்கள் வேணுமாம்.... உலக அளவில அதிகளவில் வெளியூர்களில் பிழைக்கும் இனம் தமிழ் இனமும், மலையாள இனமுமாகத்தான் இருக்கும்.....

என்னமோ போங்க போனதடவை பெங்கால் முதல்வர் கொல்கத்தாவின் வெற்றியை அரசு வெற்றி ஆக்கி அரசியல் ஆக்கினார்... தமிழ் நாடும் இம்முறை பங்கேற்கிறது....

Tuesday, April 16, 2013

புரட்சி



மக்கள் புரட்சி, மாணவர் புரட்சி, பத்திரிக்கை புரட்சி, தலைவர்கள் புரட்சி, பசுமை புரட்சி, விஞ்ஞான புரட்சி, கணினி புரட்சி இவ்வழியே இந்த புரட்சிகளுக்கு பின் இந்த டிகேடின் இணையற்ற புரட்சி ஆரம்பித்திருக்கிறது.... அதுதான் இணைய புரட்சி.......

இந்த புரட்சியாளர்கள் மிகவும் கோபக்காரர்கள்... மக்கள் பிரச்சனைக்காக பொங்குபவர்கள்.... சே குவாரவை டிசர்ட்டாகவோ, டிபியாகவோ வைத்திருப்பார்கள்.... அதுவும் தமிழ் இணைய புரட்சியாளர்களுக்கு இணையான உலக புரட்சியாளர்கள் யாருமே இல்லை எனலாம்... அவர்களுக்கு தேவை தினம் ஒரு மக்கள் பிரசனை.... அது கூடங்குளமாகட்டும், அம்மா ஆட்சியாகட்டும், அய்யாவின் முன்னாள் ஆட்சியாகட்டும் அல்லது பரதேசி படம் ஆகட்டும்.... ஏதோ ஒருவகையில் தங்கள் புரட்சி கருத்துகளை வெளியிட்டு மக்களை முறுக்கேற செய்வர்.... இவர்களுக்கான நீண்ட நாள் புரட்சி திட்டம் இலங்கை தமிழர்கள்..... எப்பெல்லாம் பொழுது போகவில்லையோ அப்பெல்லாம் இந்த பிரசினையை எதாவது ஒரு ரூபத்தில் கையில் எடுத்து பொங்கி விடுவார்கள்.... பீ கேர்ஃபுல்....  யோசித்து பாருங்கள்... மாணவர் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன ஆனது.....

ஆனாலும் இந்த இணைய புரட்சியாளர்களுக்கு அந்த நேரத்தில் தங்கள் புரட்சி கருத்துகளை அரங்கேற்ற அப்பிரசினை பெரிய அளவில் உதவியது....

இந்த புரட்சிகளால் மின்மிகு, போதையில்லா, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழகமாக 2020ல் தமிழகம் முன்னோடி தமிழ் நாடாக மாறப்போவது உறுதி

Wednesday, March 27, 2013

விமர்சனங்கள்



நேற்று ஹோலி விடுமுறையை முன்னிட்ட்டு மூன்று படங்கள் பார்த்தேன்

ஆச்சர்யங்கள்

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம்.. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் நடிகர்களின் பங்களிப்பில் நன்றாக இருந்தது....

பிஸினஸ்மேன் - தெலுகு

மகேஷ்பாபுவின் இன்னொரு அதிரடி சரவெடி ஆக்ஷன்.... பட்டாசாக வெடித்த லாஜிக் இல்லா திரைக்கதையால் நிரம்பவே நொண்டியடித்தது... ஆனாலும் மகேஷ் மற்றும் காஜல் கூட்டணி அந்த குறையில்லாமல் பார்த்து கொண்டது.....


சந்தமாமா

அம்பாசமுத்திரம் அம்பானிக்கு பிறகு கருணாஸ் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம்.... பார்க்கவே முடியவில்லை...

Monday, March 18, 2013

தேசிய விருதுகள்



பாலாவின் பரதேசி உலக படம் என்று சொல்பவர்களுக்கு செருப்பால் அடித்தார்போல் இருந்திருக்கும்.... உள்ளூரில் யாருக்கும் பிடிக்காத படம் எப்படி உலக படம் ஆகும்.... ஆவணபடம் எடுக்கும் போது அதன் வலியை சில கற்பனை கலந்து எடுத்தால்தான் அது சிறந்த படைப்பாக வெளிவரும்... டைட்டானிக்கில் ஜாக் அன் ரோஸ் காதல் எபிசோட் அந்த சோகத்திற்கு வலு சேர்த்ததே தவிர சற்றும் பொருந்தாமலோ அல்லது துருத்தி கொண்டோ தெரியவில்லை.. அதனால்தான் டைட்டானிக் இன்றளவும் கொண்டாடபடுகிறது... ஏன் பாலாவின் பிற படைப்புகள் கூட ஒரு காதலை அடிப்படையாக கொண்டமைந்தவையே.... பாலா, மிஷ்கின் போன்றவர்கள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைகளாக மின்னி சட்டென மறைந்து விட்டனரோ என தோன்றுகிறது.... ராஜமெளலிக்கு இணையான தமிழ் இயக்குனர் உருவாக போவது எப்போது என்று தெரியவில்லை...

வழக்கு எண் படத்திற்கு உரிய மரியாதை கிடைத்து விட்டது.... விஷ்வரூபத்திற்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.... அனைவருக்கும் வாழ்த்துகள்

Sunday, March 17, 2013

பரதேசி தமிழன்



இது விமர்சிக்க வேண்டிய படம்தான்.... ஒருபடம் என்ன பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டுமோ அது எதுவுமே நிகழ்த்தாமல் மெல்ல நகரும் ஒரு ஆவண படம்தான் இந்த பரதேசி... என்னதான் சில நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தாலும் "ஆபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் அவுட்" என்ற நிலைதான் இந்த படத்திற்கும்.... பாலா படம் முடிந்து வரும்போது கிடைக்கும் ஒரு சிறப்பான அனுபவம் மிஸ்ஸிங்...

அங்காடி தெரு படம் பார்த்த போது ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி, நெகிழ்ச்சி இந்த படத்தில் சுத்தமாக இல்லை... மேலும் வேலை பார்ப்போரின் நிலை எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது.... என்னதான் செக்யூர்டு கம்பெனியில் வேலை பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேட்டால் கட்டம் கட்டி விடுகிறார்கள்.... இந்த படத்தில் காட்டியிருக்கும் விஷயங்கள் எல்லா வேலையாட்களுக்கும் எல்லா காலகட்டத்திலும் பொருந்தும்... படங்கள் தரும் இம்பாக்ட் அதிகம் என்றால் அங்காடி தெருவில் கடைகள் இன்னேரம் பூட்டபட்டிருக்கும் கூட்டம் இல்லாமல்....

எல்லோருமே விலை மலிவு என்ற சொல்லின் பின் செல்ல வேண்டியிருப்பதால்.... இந்த படம் பார்த்தேன் என்ற விஷயத்தை பதிந்து இப்பதிவை முடிக்கிறேன்...




Monday, March 11, 2013

ஏன்

திருடனாக இருந்த வியாசர் திருந்தி மகாபாரதம் எழுதினார் என்றால் கண்ணை மூடி நம்புகிறோம்

சிறந்த ஊழல்வாதியாக இருந்த முன்னாள் பீகார் முதல்வர் ரயில்வே துறையில் அசுர சாதனைகள் புரிந்த போது மனம் உவந்து பாராட்டுகிறோம்

சீர்யல்களிலோ, சினிமாவிலோ கூட வில்லன் மனம் திருந்தினால் கூட சந்தோஷபடுகிறோம்

திருந்தாத தலைவியை கூட முழு மெஜாரிட்டியில் ஆட்சியில் அமைத்து அழகு பார்க்கிறோம்

ராபின் ஹூட்களை கூட நம்புகிறோம்

ஆனால் வயதான தலைவர் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறேன் என்று சொன்னால் மனம் நம்ப மறுக்கிறதே ஏன்?????

Sunday, March 3, 2013

Life of Pi



மும்பை IMAXல் 150 ரூபாய்க்கு டிக்கெட் கிடைத்ததால் சென்ற படம்.... விஷூவல் எபக்ட்ஸ்க்காகவே பார்க்க வேண்டிய படமாகி விட்டது.. ஒரு நல்ல படம் பார்த்து ஒரு நல்ல படமும் எடுத்து கொண்ட திருப்தி கிடைத்தது.... படம் கீழே


Monday, February 4, 2013

ஏன் கமல்?



விஸ்வரூபம் படம் பார்த்த பிறகு சில கேள்விகள்....

1) அப்பா மகன் உறவை கொச்சை படுத்தி வெளியான நடுநிசி நாய்கள் படத்தை கிழி கிழி என கிழித்தவர்கள் ஒரு சமுதாயத்தை இவ்வளவு கொச்சை படுத்தியிருக்கும் படத்தை கிழிக்காமல் இருப்பது ஏன்?

2) இங்கே பிவண்டி எனும் புறநகர் பகுதியில் (முஸ்லீம் சமூகம் மெஜாரிட்டியாக வாழும் ஏரியா) விசிலடித்து கைதட்டி படத்தை கொண்டாடி பார்க்கும் ரசிகர்கள் மிகவும் இறுக்கமாக இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஏன்?

3) உண்மையில் நடப்பதைத்தான் காட்சிபடுத்தியிருக்கிறோம் என்றால் அது ஒரு டாகுமெண்டரியாக எந்த சார்பும் இல்லாமல் இருக்க வேண்டுமே தவிர கற்பனையான‌ வெகுஜன சினிமாவில் இவ்வளவு டீடெயிலிங் ஏன்?

4) உங்கள் படத்தை தடை செய்யாமல் உங்களுளையே இனிமேல் படமே எடுக்க கூடாது என்று தடை விதித்தால் என்ன?

5) தங்கள் சக போட்டியாளரான ரஜினி இதுவரை ஏதாவது ஜாதி பெயரிலோ மதத்தின் பெயரிலோ நடிக்காமல் கமர்சியல் சினிமாவை கமர்சியலாகவே முன்னெடுத்து சென்று ஜெயித்து கொண்டிருக்கிறாரே ஏன்?

6) ஒரு மனநலம் இல்லாத சிறுவனை மனித வெடிகுண்டாக மாற்றும் காட்சிகள் எல்லாம் இந்திய சினிமாவிற்கு தேவையா... இது சிலரின் மனதை புண்படுத்தும் என்பது தெரியாதது ஏன்?

7) வெளியிடவே தகுதி இல்லாத ஒரு சினிமாவிற்கு 'UA' சான்றிதழ் பெற்றது எப்படி?

8) குருதிபுனல், ஹேராம், உன்னை போல் ஒருவன், விஸ்வரூம் என தொடர்ந்து ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் படங்களை எடுக்க உங்களை தூண்டுவது யார்?

9) மன்மதன் அம்புவில் ஒருபாடலுக்கு எதிர்ப்பு சொன்னதால் அந்த பாடலையே படத்தில் இல்லாமல் பார்த்து கொண்டவர் இந்த படம் அதிர்வலைகளை உண்டாக்கும் என கணிக்காமல் விட்டது எப்படி?

10) வீட்டை வைத்து படம் எடுத்திருக்கிறேன் என்று சிம்பதி க்ரியேட் பண்ணுகிறவர், நாடு முக்கியம் என்ற வாதமும் செய்பவர், 50 வருட அனுபவம் மிக்கவர் இந்த சினிமா எந்த அளவிற்கு ஒரு சமூகத்தை புண்படுத்தும் என்று புரியாமலா இருக்கிறீர்கள்?

11) ஏதோ ஒரு அமைப்பில் இருக்கிறீர்களாமே? அவர்கள் கருத்து என்ன?

உங்களால் ஒரு நன்மை.....  பூனைக்கு மணியை கட்டி விட்டார்கள்... இனியாவது படம் எடுப்பவர்கள் சற்று சிந்திப்பார்கள்



Sunday, February 3, 2013

விஸ்வரூப்



தமிழக அரசு மற்றும் மத அமைப்புகளின் புண்ணியத்தால் என்னதான் ப்ரசினை என்று பார்க்க வந்த வட இந்திய க்யூரியாசிடி பார்டிகளால் சனி இரவு ஹவுல் காட்சியாக விரிந்த படம் விஸ்வரூப்

முதலில் கதா நாயகன் ஒரு கதக் டான்ஸராக அறிமுகம்... மனைவியிடம் கூட‌ கணவனாக நடக்காத கேரக்டர்... குறட்டை விட்டு தூங்குவதாக நடிக்கிறார்..... அதனாலோ என்னமோ மனைவி இன்னொருவருடம் செக்ஸ் மட்டும் இல்லாத தொடர்பு வைத்திருக்கிறார்... அவர் அப்படி இருப்பதால் இவரும் அப்படி இருந்தால் மன உளைச்சல் இல்லை என்பதால் இவரை வேவு பார்க்க ஒரு ஆளை நியமிக்கிறார்... அவர் இவரை பற்றி பார்ப்பவர் உட்பட யாருமே திடுக்கிடாத உண்மையை கண்டுபிடிக்கிறார்... அதாவது இவர் வேறு மதத்தவர் என்று.... ஆனால் கண்டுபிடித்த சில நிமிடங்களில் சிலரால் கொல்லப்படுகிறார்.... அந்த சிலர் நாயகனையும் அவரது மனைவி மற்றும் காதலனை பிடித்து வந்து சில வசனம் மற்றும் போன் காலுக்கு பிறகு மனைவியின் காதலனை கொன்று விடுகின்றனர்... நாயகனை சுடுவதற்கு முன் நாயகர் இறைவனை வேண்டிக் கொள்ள அனுமதிக்கிறார்கள்.... அப்போது நாயகன் எடுக்கிறார் விஸ்வரூபம்.... பாட்ஷா பட காட்சிக்கு 50% அளவிற்கு வந்திருக்கிறது இந்த காட்சி.... குடுத்த 150 ரூபாயில் 125 ரூபாய் இந்த காட்சிக்கு கழித்து கொள்ளலாம்... மீதி 25 ரூபாய் நாயகிக்கு கொடுத்து விடலாம்....

இதற்கு மேல் படம் விமர்சிக்கவோ, பார்க்கவோ, எழுதவோ தகுதி இல்லாமல் இப்படம் இருப்பதால் இத்துடன் விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்


Monday, January 28, 2013

விஷ்வரூபம்



கமலின் விஷ்வரூபம்...  11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு 6 தொடர் விடுமுறை நாட்களில் சுமார் 70 கோடி அளவில் தியேட்டர்களிலேயே வசூலித்திருக்க வேண்டிய படம்... 70 கோடி படம் சுமாரக இருக்கும் பட்சத்தில்.. நன்றாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு 10 கோடி சேர்ந்திருக்கும்... ஆனால் கமலின் பேராசை மற்றும் ராங் கால்குலேஷன் DTH என்னும் போர்வையில் அதை கெடுத்து விட்டது... போகட்டும்..

DTH பிரச்சனையில் என் சொத்து, என் பண்டம் என்று குதித்தவர் ஏன் சென்சார் சர்டிபிகேட்டுக்கு பிறகு சில அமைப்புகளுக்கு படத்தை போட்டு காட்டி இப்படி தடை அளவிற்கு சென்றார் என்று புரியவில்லை... ஒரு படம் சென்சார் ஆனபிறகு ரிலீஸ் செய்யப்பட்டு பொதுமக்களோ அல்லது அமைப்புகளோ தடை கோரினால் சம்மந்தபட்ட காட்சிகளை எடிட் செய்து கண்டினியூ செய்யும் சம்பிரதாயம்தான் உள்ளது... சில அமைப்புகளால் ரிலீசுக்கு முன் தடை என்ற கலாச்சாரத்தையும் சென்சார் அமைப்பையும் கேலி கூத்தாக்கி விட்டார் கமல்... மேலும் இப்படத்திற்கு சான்றளித்த அதிகாரிகளைத்தான் கோர்டில் விசாரிக்க வேண்டுமே தவிர தயாரிப்பாளர்களை அல்ல...

என்னை பொருத்த வரை மொக்க படமாக வந்ததினால் ஒரு நெகடிவ் சிம்பதியை கிரியேட் பண்ண சிலர் செய்த தந்திரமாகவே படுகிறது விஷ்வரூப விவகாரம்


என்னமோ போங்க.. மும்பையில் தமிழ் தெலுகு எந்த வெர்ஷனுமே ரிலீஸ் ஆகவில்லை

Sunday, January 20, 2013

2012 - ஒரு பார்வை

போன வருடம் 161 நேரடி படங்களும், 51 மொழி மாற்று படங்களும் வந்திருப்பதாக பதிவுலக ரமணாக்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் இருந்த வரை தியேட்டரில் மட்டுமே படம் பார்த்துக் கொண்டிருந்த நான் மும்பை வந்த பிறகு தமிழ் பட ரிலீஸ் ரொம்ப கம்மியாக ஆவதால் சின்ன திரையிலும் பார்க்கும் கொடுமைக்கு ஆளாகிறேன். சென்ற ஆண்டு நான் பார்த்த படங்களின் லிஸ்ட் மற்றும் ரேட்டிங் கீழே பதிந்துள்ளேன்


நண்பன் - திரை - ஒர்த் 4/5
வேட்டை - திரை  - ஒர்த் 3/5
முப்பொழுதும் உன் கற்பனைகள் - திரை - வேஸ்ட் 0.5/5 (0.5 அமலா பாலுக்காக)
அரவான் - திரை - வேஸ்ட் - 1/5
டைட்டானிக் 3டி - திரை - ஒர்த் - 3/5
OK OK - திரை - ஒர்த் - 4/5
வழக்கு எண் 18/9  - திரை - ஒர்த் - 4/5
நான் ஈ - திரை - ஒர்த் - 5/5
அட்டக்கத்தி - திரை - ஒர்த் - 4/5
மாற்றான் - திரை - வேஸ்ட் - 1/5
துப்பாக்கி - திரை - ஒர்த் - 4.5/5

மகான் கணக்கு - சின்ன திரை - ஒர்த்  - 3/5
காதலில் சொதப்புவது எப்படி - சின்ன திரை - ஒர்த் - 3.5/5
அவெஞ்சர்ஸ் - சின்ன திரை - ஒர்த் - 3/5
கலகலப்பு - சின்ன திரை - ஒர்த்  - 3/5
ராட்டினம் - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
தடையறத் தாக்க - சின்ன திரை - ஒர்த் - 3/5
சகுனி  - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
பில்லா-2  - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
மதுபானக்கடை - சின்ன திரை - ஒர்த் - 3/5
டோட்டல் ரீ கால் - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
பீட்சா  - சின்ன திரை - ஒர்த் - 4/5
சந்திரமெளலி  - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
சுந்தரபாண்டியன் - சின்ன திரை - ஒர்த் - 3/5
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - சின்ன திரை - ஒர்த் - 3.5/5
நீதானே என் பொன்வசந்தம்  - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
கும்கி - சின்ன திரை - வேஸ்ட்  - 1.5/5
நான் - சின்ன திரை - ஒர்த் - 3/5
தாண்டவம்  - சின்ன திரை - வேஸ்ட் - 2/5

கண்ணா லட்டு தின்ன ஆசையா



கதை (அ) மூலக்கதை - பாக்யராஜ் பதறுகிற அளவுக்கு ஈயடிச்சான் காப்பி இல்லை... பாக்யராஜாலேயே இவ்வளவு சுவாரஸியமாக மறுபதிப்பு செய்திருக்க முடியாது அதுவும் சாந்தனுவை வைத்து... இப்படியாவது அவருக்கு பணமும் பப்ளிசிடி கிடைத்ததையும் நினைத்து சந்தோஷபடுமளவிற்குதான் செய்திருக்கிறார்கள்....
குறிப்பு : எந்த காப்பி பேஸ்ட் படத்திலும் ஒரிஜினல் படத்தின் 7 காட்சிகள் வரிசையாக இடம் பெறாவிட்டால் காப்பி ரைட் சட்டம் எதுவும் செய்ய முடியாது.. அந்த வகையில் பாக்யராஜால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்குதான் திரைக்கதையை மாற்றி இருக்கிறார்கள்.

சந்தானம் - காற்றுள்ள போதே தூற்றி கொண்டிருக்கிறார்... அறை எண்ணில் கடவுள் படத்தில் விட்டதை சொந்த தயாரிப்பில் பிடித்துள்ளார்... தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் மற்றவர்களையும் முன்னிறுத்தியிருப்பதால் கமலை விட சிறந்த கலைஞனாக தெரிகிறார். மேலும் சொன்ன தேதியில் பாக்யராஜ் குழப்பியும் கூட இவர் எந்த குழப்பமும் இன்றி ரிலீஸ் செய்ததால் கமல் இவரிடம் கற்று கொள்ள வேண்டியது ஏராளம்

பவர்ஸ்டார் - இதுதான் சரியான் வழி என்று தெளிந்து கெட்டியாக பிடித்து கொண்டால் இன்னும் நல்லா வருவார்

சேது - கதை நாயகன் இவரும் கிடைத்த வாய்ப்பை புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக செய்துள்ளார்.... மேலும் பட வாய்ப்புகள் கிடைத்தால்தான் தெரியும் இவர் பவுசு

விசாகா - டல் திவ்யா தூள் திவ்யா ஆன பிறகு வந்திருக்கும் படம்... ஒரு பட மேஜிக்தான் என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்

வசனம் - சரவெடி - ஒன் லைனர்ஸ் அற்புதம்

டைரக்ஷன் - வெல்டன் மணிகண்டன் - சிம்புதேவன் போல ஒரு படம் மட்டும் ஹிட் பண்ணாமல் எல்லா படமும் ஹிட் செய்ய வாழ்த்துகிறேன்

Tuesday, January 15, 2013

மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

சமீபத்தில் விவசாய நிலங்கள் பிளாட்டுகள் ஆக்கப் படுவதை பார்க்கும் போது நிறைய பேர் தைய தக்கா என்று குதிக்கிறார்கள்.... என் சிந்தனைகளை கீழே தொகுத்துள்ளேன்...

சர்வைவல்... இந்த ஒரு வார்த்தைதான் வாழ்வின் ஆதாரம்.... எல்லோரும் பழைய சூழ்நிலையிலா வாழ்கிறோம்... திண்ணை, முற்றம் வைத்த வீட்டிலா இன்னும் வசிக்கிறோம்... வீட்டின் பின்னே கிணறு இன்னும் இருக்கிறதா... அதெல்லாம் காணாம போகும் போது நிலங்களும் காணாம போவது இயல்புதானே.... விவசாயம் நடக்கலேன்னா என்ன செத்தா போய்டுவோம்......அரிசி இல்லாட்டி என்ன? பிட்சா, பர்கர் எல்லாம் மாற்று உணவுதானே... இளநீர், பதநீருக்கு பதிலா பெப்சி, கோக் குடிக்காமலா இருக்கோம்... எலக்ட்ரிக் சுடுகாட்ல எரிக்காமலா இருக்கோம்... கக்கூஸூல தண்ணிக்கு பதிலா பேப்பர் யூஸ் பண்ணாமலா இருக்கோம்.... எல்லாத்துலயும் சர்வைவ் பண்றதாலதான் மனித இனம் நிலைத்து நிற்கிறது இந்த பூமியில்.... இல்லாட்டி கரப்பான் பூச்சியாவே திரிஞ்சிருப்போம்....

அத புரிஞ்சிக்காம வருத்தப்படாம, வேதனை படாம எல்லோரும் சந்தோஷமா இருங்க‌

இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Sunday, January 13, 2013

சமர்



மும்பையில் வேறு தமிழ் படம் ரிலீஸ் ஆகாததால், பொங்கலுக்கு தமிழ் படம் பார்க்காவிடில் தலை வெடித்து விடும் என்ற சாபம் இருப்பதால், 70 ரூபாய்க்கு பிக் சினிமாஸில் ப்ளாட்டினம் கவுண்ட்டரில் டிக்கட் கிடைத்ததால், முதல் நாளே பார்த்த விஷால் படம் என்ற பெருமை சமருக்கு கிடைத்திருக்கிறது....

கொஞ்சம் பட்டி பாத்து  டிங்கரிங் செய்திருந்தால் சூப்பர் படமாக வந்திருக்க வேண்டியது செம மொக்க படமாக வந்திருக்கிறது... த்ரிஷா போனால் திவ்யா என்ற பழமொழியின் அடிப்படை மாற்றி அமைத்து சுனைனா போய் த்ரிஷா கிடைத்திருக்கிறார் விஷாலுக்கு... சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் என்று மெயின்டெயின் செய்த விஷயம் இரண்டாவது காட்சியிலேயே புரிந்து விடுவதாக அமைந்திருப்பதுதான் பரிதாபம்.... பிட்சா குழுவினருக்கு இந்த நாட் மற்றும் பட்ஜெட் கிடைத்திருந்தால் பட்டய கிளப்பியிருப்பார்கள்

சமர் - அர்த்தமும் புரியல... படமும் புடிக்கல‌

Thursday, January 3, 2013

கும்கி



படமா இது... எப்படிதான் ஓடுதோ தெரியல.... சரியான மொக்க படம்... பாடல்களும் ஒளிப்பதிவு மட்டும் இல்லேன்னா படம் பாக்குறவன் தற்கொலதான் பண்ணுவான்...

விக்ரம் பிரபு - ஒரு பட மேஜிக்தான்.... நடிகருக்கான தூரம் அவருக்கு ரொம்ப தூரம்

லட்சுமி மேனன் - என்னதான் இருக்குன்னு தெரில இந்த பொண்ணா எல்லாரும் கொண்டாடுறதுக்கு...

இமான் - இந்த மொக்க படத்தின் நிஜ ஹீரோ

சுகுமார் - செகண்ட் ஹீரோ

பிரபு சாலமோன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்